யாழ் குடும்பஸ்தர் வவுனியாவில் சடலமாக மீட்பு..! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 November 2022

யாழ் குடும்பஸ்தர் வவுனியாவில் சடலமாக மீட்பு..!


யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் வவுனியா - பூவரசங்குளம் காட்டுப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

48 வயதுடைய அச்சுதநாயகர் ஜெயந்தகுமார் என்பவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கந்தன்குளத்திலுள்ள தமது உறவினர் வீட்டில் கடந்த ஒரு வருடமாக தங்கியிருந்து, அங்குள்ள காணியினை தனியாக பராமரித்து வந்துள்ளார்.


இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதியிலிருந்து அவரை காணவில்லையென, பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காட்டுப்பகுதியில் காணாமல்போனவரின் உடலை மீட்டுள்ளனர். எனினும் அவரது மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad