கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரையின் பெயரில், கெளரவ முதலமைச்சின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.பைசால் சேர் அவர்களின் வழிகாட்டலுக்கமைய Clean Srilanka வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோர பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் அவர்களினால் அட்டாளைச்சேனை கடற்கரைப் பூங்கா மூன்றலில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரை சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர், செயலாளர்,சபையின் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரதேச சபை. அட்டாளைச்சேனை
No comments:
Post a Comment