ஒளிபரப்பாளரும், ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளாருமான எம்.எஸ்.எம். சஜீ ஊடகத்துறையில் 25 வருட காலமாக கடமையாற்றி வருவகிறார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் ஊடகக் கல்வியை கற்று நிறைவு செய்து வெளியேறி அவர் ஊடகத்தை மக்களுக்காக பயன்படுத்தி வறியோறுக்கும் விசேட தேவையுடையோரின் வாழ்வுக்கும் ஒளியூட்டி வழிகாட்டியமைக்காக தலை நகரில் பாராட்டி விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
சிலோன் ஓபன் கெம்பஸ் ஏற்பாட்டில் இடம் பெற்ற மூன்றாவது பட்டம் அளிப்பு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (10) இடம் பெற்ற விருது வழங்கும் நிகழ்விலேயே இவருக்கும் விருதும் பாராட்டும் வழங்கி வைக்கப்பட்டது.
( B.M. பயாஸ் )
No comments:
Post a Comment