மாகாண மட்ட தனி நபர் சதுரங்க போட்டியில் ஆயிஷh அயானா முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 16 November 2022

மாகாண மட்ட தனி நபர் சதுரங்க போட்டியில் ஆயிஷh அயானா முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு.


மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவி முகம்மது சமீம் ஆயிஷh அயானா மாகாண மட்ட தனிநபர் சதுரங்க போட்டியில்  15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சம்பியனாகி தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாய்ந்தமருது மழ்கறுல் ஷம்ஸ் வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற மாகாண மட்டப்போட்டியிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கான விருது மற்றும் சான்றிதழ் என்பவற்ரை பாடசாலை அதிபர் ஐ.உபைதுல்லா அண்மையில் (08-11-21022) செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார். கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவரும் இம்மாணவி மருதமுனையைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஏ.டபள்யு.முகம்மது சமீம், மெஸ்பானி தம்பதியின் புதல்வியாவார்.


No comments:

Post a Comment

Post Top Ad