பிந்தங்கிய பிரதேசமாகக்காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர் பிரதேச சபை உறுப்பினருக்கென கிடைத்த முதல் மாதக்கொடுப்பனவை சாளம்பைக்கேனி - 04 மூன்றாம் வட்டாரத்தில் ஒரு குடும்பத்திற்கு நேற்று முன்தினம் (09) அன்பளிப்புச்செய்துள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர்; தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த கொடுப்பனவை மக்களுக்கே வழங்கும் நான் எனது பதவிக்கால சகல மாத கொடுப்பனவுகளையும் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க பொதுமக்களுக்கே வழங்குவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். அம்ஜத் தலைமையில் இடம்பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையுடைய குடும்பத்திற்கு குறித்த பணத்தொகையை கையளிக்கும் நிகழ்வில் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி முஹமட் ரிஷ்வான் உட்பட பிரமுகர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment