வதந்தியை நம்ப வேண்டாம் : சரத்பாபு உயிருடன் இருப்பதாக சகோதரி அறிவிப்பு !
நடிகர் சரத்பாபுவின் மறைவு குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து நடிகர் சரத்பாபுவின் சகோதரி கருத்து வெளியிடுகையில், “சமூக வலைதளங்களில் சரத்பாபு பற்றிய அனைத்து செய்திகளும் தவறாக வருகின்றன.
சரத்பாபு சற்று குணமடைந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல நடிகர் சரத்பாபு உடல் நல குறைவு காரணமாக தனது 71வது வயதில் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐதராபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஐம்பது ஆண்டுகள் சினிமா துறையில் இருக்கும் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அண்மைய நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மாதம் 20ம் திகதி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதனால் சிகிச்சை பலனின்றி சரத்பாபு இன்று உயிரிழந்தார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இன்று காலை பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான மனோ பாலவும் உடல்நல குறைவால் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment