13ஐ' அமுல்படுத்தும் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 1 August 2023

13ஐ' அமுல்படுத்தும் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை !

13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி இலங்கையில் தமிழ் மக்களை கௌரவமாக வாழ வைக்கும் மற்றும்  மாகாண சபைத் தேர்தலை நடத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றம் இல்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.


தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவுக்கும் இடையிலான விசேட சந்திபொன்று இன்று காலை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.


இந்த சந்திப்பிலேயே இந்திய  உயர்ஸ்தானிகர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.


சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், கோவிந்தம் கருணாகரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad