ஓட்டமாவடி வீதிகளை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 July 2025

ஓட்டமாவடி வீதிகளை துப்பரவு செய்யும் பணியில் இராணுவத்தினர் !

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸின் வேண்டுகோளுக்கமைய பிரதேச சபை எல்லைக்குள் காணப்படும் வீதிகளை துப்பரவு செய்யும் பணிகளை நாவலடி இராணுவ முகாம் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் போது, பிரதேசத்தில் வீதி வேலைகள் மற்றும் குடிநீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்டு அகற்றப்படாமல் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகக் காணப்பட்ட கொங்கிரீட் துண்டுகள், உடைந்த வடிகான் மூடிகள் என்பன அகற்றப்பட்டு துப்புரவுப்பணி முன்னெடுக்கப்பட்டன.

தனது வேண்டுகோளையேற்று குறித்த பணியினை மேற்கொண்ட நாவலடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவத்தினருக்கு தவிசாளர் நன்றி தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் இவ்வாறான பணிகளை முப்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளவுள்ளதாகவும் மக்களுக்கான பணி தொடருமெனவும் தவிசாளர் தெரிவித்தார்.


(எஸ்.எம்.எம்.முர்ஷித் )


No comments:

Post a Comment

Post Top Ad