A -9 வீதியை முடக்கி யாழ்ப்பாணம் - சாவகச்சோியில் மக்கள் போராட்டத்தில் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 8 July 2024

A -9 வீதியை முடக்கி யாழ்ப்பாணம் - சாவகச்சோியில் மக்கள் போராட்டத்தில் !



யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் தொடங்கியுள்ளது.

வட்சப் ஊடாக செய்திகளை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்.

மக்களுக்கு தனது சேவையை நேர்மையுடன் செய்யவேண்டும் என நினைத்த மருத்துவர் அத்தியட்சகர் அருச்சுனா - இராமநாதனுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தைகள்  மூடப்பட்டுள்ளன.



மருத்துவருக்கு ஆதரவாக  கிளர்ந்தெழுந்த  மக்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (8) வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதுடன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவின் கட்டுப்பாட்டில் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய பதில் அத்தியட்சகருக்கான கடிதம் கிடைத்தவுடன் விரைவில் நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

டெலிக்ராம் ஊடாக இணைந்துகொள்ள இங்கே அழுத்தவும்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும், வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.



யாழ் சாவகச்சேரி மருத்துவமனையில்  சுகாதார குறைபாடுகள் தொடர்பில்  மருத்துவ அத்தியட்சகர்  அருச்சுனா - இராமநாதன்  அம்பலப்படுத்தியிருந்த  நிலையில், நேற்றிரவு அவரை கைது செய்வதற்கு    பொலிஸார் அங்கு சென்றதை அடுத்து  மக்கள் மருத்துவருக்கு ஆதரவாக  களமிறங்கியுள்ளனர்.



No comments:

Post a Comment

Post Top Ad