நாளை நள்ளிரவு முதல் சாதாரணதர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 22 May 2023

நாளை நள்ளிரவு முதல் சாதாரணதர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை !

நாளை நள்ளிரவு முதல் சாதாரணதர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை ! 


செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும். 

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் மே 29 முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


இந்நிலையில் கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதற்கு மேலதிகமாக, மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் பரீட்சை வினாக்களை விளம்பரப்படுத்துதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.


எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad