விரைவில் மாகாண சபைத்தேர்தல் - நிசாம் காரியப்பருக்கு அரசு பதில் ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Friday, 23 May 2025

விரைவில் மாகாண சபைத்தேர்தல் - நிசாம் காரியப்பருக்கு அரசு பதில் !

1000118404

நீண்டகாலமாக நடைபெறாதிருக்கும் மாகாண சபைத்தேர்தல் இவ்வருடத்திற்குள் நடைபெறுமென ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறி வந்த நிலையில்,  மாகாண சபைத்தேர்தலை நடத்துவதென்றால் மாகாண சபைத்தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 


கடந்த ஆட்சிக்காலத்தில் தற்போதைய இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கேற்றவாறு தனி நபர் பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். 


கடந்த அரசாங்கம் கவனத்திலெடுக்காததால் அவை நிறைவேற்றப்படவில்லை.


இவ்வாறான சூழ்நிலையில் மாகாண சபைத்தேர்தல் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் படி இவ்வருடத்திற்குள் நடைபெறுமா?, அதற்கான சட்டமூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனவா? எவ்வாறான நடவடிக்கை?, நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் என்ன காரணம்? என்ற தோரணையில் பொது நிர்வாகம் மற்றும் உளளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரிடம் இன்று (23) பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர் கேள்வி தொடுத்திருந்தார்.


குறித்த கேள்விகளுக்கு விடயத்திற்குப் பொறுப்பான பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபை அமைச்சர் தாமதமின்றி மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும் எனவும், உரிய ஏற்பாடுகள் எடுக்கப்படுவதாக எனப்பதிலளித்தார்.  


                 ( எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) )

No comments:

Post a Comment

Post Top Ad