போலி கடவுச்சீட்டுகளை தயாரித்து வழங்கிய 9 பேர் கைது !
குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு அருகில் காத்திருந்த மக்களிடம் பணம் பெற்ற 9 பேர் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று வெள்ளிக்கிழமை (19) கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்கள், சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வரும் நபர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டுகளை மோசடியான முறையில் தயார் செய்து வழங்கியதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மோசடியாளர்களுடன் இணைந்து செயற்படும் திணைக்கள அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment