இந்தியாவின் ஐ நா நிலைப்பாடுகள் தமிழர்களை கவலையடைய செய்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 October 2022

இந்தியாவின் ஐ நா நிலைப்பாடுகள் தமிழர்களை கவலையடைய செய்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை.

இந்தியா தமிழர்களை கொச்ச்சைப்படுத்துவதுடன் ஒருபோதும் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்காது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இடம் பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐ நா தீர்மாணத்தின் மீதான  வாக்களிப்பின் போது இந்திய ஒளித்துக்கொண்டமை எங்கள் தாய்மார்களை கவலையடைய செய்துள்ளது என்பதோடு ஒரு நண்பருக்கு உதவி தேவைப்படும்போது உண்மையான ஓர் நண்பர் உதவுவார், ஆனால் இந்தியா எங்களுக்கு ஒரு நண்பர் இல்லை என்பதை எங்கலளுக்கு காட்டியுள்ளது. இந்தியாவை ஆதரிக்கும் தமிழ் அரசியல் வாதிகளும் முகவர்களும் தங்களுடைய சிந்தனை சரியா என்பதை தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


எனவே ஒடுக்குமுறை அடிமைப் பொருளாதாரம் மற்றும் ஆகிரமிப்பிலிருந்து எங்களை விடுவிக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அழைப்பதுதான் ஒரே வழி என்பதோடு பொது வாக்கு எடுப்புக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வசதி செய்துதருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad