கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை க.பொ.த. சாதாரண தர 2024/2025 மாணவர்களுக்கான "Adieu Dreams" என்ற தொனிப் பொருளில் சாதாரண தர தின விழா நேற்று (08) மாலை கல்லூரியின் எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் சாதாரண தர பகுதி தலைவர் ஏ.எச்.எம்.ரிஸான் ஆசிரியரின் வழிநடத்தலில் ஓய்வு பெற்ற சிரேஷ்ட ஆசிரியர் யு.எல்.எம். ஹிலால் அவர்களின் மேற்பார்வையில் அதிபர் எம். ஐ. எம். ஜாபீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம், விசேட அதிதிகளாக பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலிக் ஆகியோரும் மற்றும் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் உட்பட பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்று குழுச் செயலாளர் டாக்டர் சனுஷ் காரியப்பர், சாதாரண தர உதவி பகுதித் தலைவர் ரீ.எஸ்.அஜ்மல் ஹுசைன் ஆகியோரும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றார் மற்றும் நிகழ்வுக்காக அனுசரனை வழங்கிய தொழிலதிபர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு 2024 ஆம் ஆண்டு சாதாரண தரம் கற்ற மாணவர்களில் மாணவத் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள் அது போன்று பாடசாலை மட்ட இறுதி பரீட்சையில் 9 A சித்திகளை பெற்ற மாணவர்கள் என பலரும் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு மாணவர் மஜ்லிஸ் ஏற்பாட்டில் "விளிம்பு" எனும் சிறப்பு நினைவு மலரும் அதிதிகளால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
( எஸ்.அஷ்ரப்கான் )
No comments:
Post a Comment