இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் கணக்காளர் சி. எம். வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். இதன்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்று செல்லும் ஊழியர்களிடத்தில் உரையாற்றிய உபவேந்தர்;
பல்கலைக்கழகத்துக்கு ஆற்றிய பணிகள் மற்றும் காரியாலய கடமைகளில் அவர்களின் முன் மாதிரியான செயற்பாடுகள் குறித்தும், அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மகிழ்ச்சியான ஓய்வை பெற்றுச் செல்லும் ஊழியர்களுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்றுச்செல்லும் ஓன்பது (09) ஊழியர்களின் பெயர்கள் பின்வருமாறு, பி. முருகவேல் - உதவி பதிவாளர், ஏ.ஆர். ஹப்தீன் - CSO, ஏம்.பி. முஹம்மது தம்பி - டிறைவர், யு.கே.ஏம். உசைன் - பாதுகாவலர், எஸ்.எல்.எம்.ஹைதர் - டிறைவர், எம்.ஏஸ். அஸ்ராப் - பாதுகாவலர், கே.கணேஷ் - பணி உதவியாளர், பி.டி.றாசிக் - கிரவுண்ட்மேன், டி.எம். பாரூக் - பணி உதவியாளர், இந்நிகழ்வில் பதில் பதிவாளர் பி.எம்.முபீன் மற்றும் (உதவி பதிவாளர்) வி. முகுந்தன் உள்ளிட்ட நிருவாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment