யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணிற்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 October 2022

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைதான பெண்ணிற்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளம் குடும்ப பெண்ணை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய குடும்ப பெண் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.


சந்தேகநபர் நேற்று யாழ் மேலதிக நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்க முடியாது. அவரை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மனுவில் உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad