அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டி ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 7 July 2025

அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இரவு நேர மின்னொளி கிரிக்கட் சுற்றுப்போட்டி !

a3ffb615-d89a-4302-bae8-26605bdd5ac5

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 2025.07.02ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டு இறுதிப் போட்டி 2025.07.06ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவுபெற்றது.   

 

நாற்பது (40) அணிகள் கலந்துகொண்ட சுற்றுத் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ்> நிந்தவூர் அட்வென்ஞர் அணியினர் தெரிவுசெய்யப்பட்டனர். 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஈஸ்டர்ன் வோரியஸ் அணியினர் துடுப்பெடுத்தாட முன்வந்தனர். 


முதலில் துடுப்பெடுத்தாடிய அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 25 பந்துகளுக்கு ஒரு விக்கட்டினை இழந்து 59ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 60 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்வென்ஞர் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 25 பந்துகளுக்கு ஒரு விக்கட்டினை இழந்து 40ஓட்டங்களை பெற்றனர். 


போட்டியின் சம்பியன் கிண்ணத்தினை ஒலுவில் ஈஸ்டர்ன் வோரியஸ் அணியினர் பெற்றுக்கொண்டனர். இரண்டாம் இடத்தினை நிந்தவூர் அணி தனதாக்கியது. 

போட்டியில் வெற்றி பெற்று சம்பியன்> இரண்டாம் இடங்களை பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கேடயங்களுடன் 50ஆயிரம்> 25ஆயிரம் ரூபா பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. 

48584d9a-5470-4f36-af18-7dbaf0e5894e


இந்த சுற்றுப்போட்டிக்கு பிரதான அனுசரனையாளராக நெஸ்ட் சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.எம்.சப்னாஸ் கலந்துகொண்டு வெற்றிக்கேடயம், பணப்பரிசில்களை வழங்கிவைத்தார். இரண்டாமிடத்தை பெற்ற அணிக்கான வெற்றிக்கிண்ணம், பணப்பரிசில்களை பொனிட்டா> ஸ்மார்ட் சூ நிறுவனத்தினர் வழங்கிவைத்தனர். 

ec6c0cc7-5262-452c-8dbf-c8bfe75e2328

மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.முகம்மட் கியாத் தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டு அரையிறுதிவரை முன்னேறிய மேலும் இரு கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

ec6c0cc7-5262-452c-8dbf-c8bfe75e2328


No comments:

Post a Comment

Post Top Ad