சமூக வலைதளத்தில் வைரலான ஆசிரியை மாணவியரின் நடனம் குறித்து அதிகாரிகளின் முடிவு! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Thursday, 13 October 2022

சமூக வலைதளத்தில் வைரலான ஆசிரியை மாணவியரின் நடனம் குறித்து அதிகாரிகளின் முடிவு!

photo_2022-10-13_16-08-43
அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெண் ஆசிரியை ஒருவர் நடனமாடும் காணொளி தொடர்பான விசாரணைகள் குறித்து மேல்மாகாண கல்வி திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


மேல் மாகாண கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டுச் செயற்பாட்டின்போதே குறித்த ஆசிரியை மற்றும் மாணவியர் நடனமாடியுள்ளனர்.


இதன்படி, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் நடனமாடும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad