ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கழமை(4) கட்சியின் தலைமையமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது , லுஹர் தொழுகைக்கான அதான் ஒலித்த வேளையில், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் எடுத்திருந்த படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்ததமை, விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளினால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ,அவரை கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார் .
கட்சியின் தலைவர் ஹக்கீம் உடனடி நடவடிக்கையாக யஹியாகானை நடைப்பெற்று கொண்டிருந்த உயர்பீடக் கூட்டம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளிலும் பங்குபற்றக்கூடாது என இடைநிறுத்துவதாகக் குறிப்பிட்டார்.
கட்சியில் யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டியதோடு , இந்த முடிவை மனவருத்தோடு எடுக்கவேண்டிய நேர்ந்தது பற்றியும் தலைவர் தெரிவித்தார்.
தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, அவருடன் கைகுலுக்கி முன்மாதிரியான முறையில் யஹியாகான் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
No comments:
Post a Comment