முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவூதிய தூதரகமும் இணைந்து ஏற்பாடு நடாத்திய அகில இலங்கை ரீதியிலான அல்குர்ஆன் மனனப்போட்டியில் வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக்கல்லூரி மாணவன் முஹம்மத் இல்யாஸ் முஹம்மத் இல்ஹாம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் தேசிய ரீதியாக சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் மாகாண ரீதியாக நாங்கிடங்களில் இடம்பெற்றதுடன், கிழக்கு மாகாணத்திற்குரிய போட்டி கடந்த 2024.12.28ம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்றது.
பல்வேறு பிரிவுகளில் மாகாண ரீதியாக நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றியிருந்ததுடன், இறுதிப்போட்டிக்கு 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இறுதிப்போட்டி கடந்த 2025.01.18ம் திகதி சனிக்கிழமை காலிமுகத்திடல் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இதில், வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக்கல்லூரி சார்பாகக்கலந்நு கொண்ட முஹம்மத் இல்யாஸ் முஹம்மத் இல்ஹாம் அகில இலங்கை ரீதியாக ஐந்து ஜூஸ்உ பிரிவில் முதலாமிடத்தைப்பெற்று கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர், ஓட்டமாவடி இல்யாஸ் டைலரின் மகனாவார்.
இதற்காக முயற்சித்த, ஒத்துழைப்பு வழங்கிய, பிரார்த்தனை புரிந்த அனைவருக்கும் மற்றும் பெற்றோர், வழிகாட்டல் வழங்கிய, பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரியின் அதிபர், விரிவுரையாளர்கள், நிர்வாகிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
No comments:
Post a Comment