மயோன் சமூக சேவை அமைப்புக்கும், தலைவர் றிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Saturday, 14 December 2024

மயோன் சமூக சேவை அமைப்புக்கும், தலைவர் றிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு !

1000068658


ம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த பல விடயங்களை நோக்காகக் கொண்டு மயோன் சமூக சேவை அமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு 2024.12.13  மாலை கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கட்சியின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.

வட்சப் சேனல் ஊடாக செய்திகளை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்.


மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபாவின் தலைமையில் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீனின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
1000068657

அமைப்பின் பொதுச் செயலாளர் சுகையில் ஜமால்டீன் அமைப்பின் கடந்தகால, எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.

றிஸ்லி முஸ்தபா இளைஞர்கள் தொடர்பான கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். 
1000068656


இங்கு கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் குறிப்பிடும்போது, 

அமைப்பின் செயற்பாடுகளுக்கு தன்னால் முடியுமான பங்களிப்புகளை வழங்குவதாக கட்சியின் தலைவர் தெரிவித்தார்.
1000068659


மேலும் இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மயோன் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment

Post Top Ad