மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் புதுவருடத்தினை வரவேற்கும் முகமாக வருடாந்தம் நடாத்தும் பரிசு மழை ஊருக்குள் நகரும் ஊர்தி நிகழ்வானது நேற்று (13) இரவு மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
தமிழர்களின் புதுவருடமாகிய தைப்பொங்கல் தினத்தின் முதல் நாளாகிய நேற்று ஆம் திகதி சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் வருடா வருடம் கிராமத்தின் வீதி தோறும் சென்று பரிசு மழை ஊர்தியானது சிறுவார்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் ,சிறுவர் கதை புத்தகங்கள் சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
( ரஞ்சன் )
No comments:
Post a Comment