கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை மரணம்- ஏறாவூரில் சம்பவம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 15 January 2025

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை மரணம்- ஏறாவூரில் சம்பவம் !

1000077139


ஏறாவூர் மக்காமடி குறுக்கு வீதியில் வீட்டின் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும் பெண் குழந்தை மரணமடைந்துள்ளது . 


குழந்தையின் தந்தை கல்முனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் தாயுடன் இருந்த 2 வயதான பெண் குழந்தையே வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் கிணற்றுக்கு அருகில் இருந்த கதிரையில் ஏறி கிணற்றினுள் தவறி வீழ்ந்ததில்  குறித்த மரணம் சம்பவித்துள்ளது.


அயலவர்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் ஜனாசா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் , ஏறாவூர் பொலிசாரின் விசாரணைகளை அடுத்து பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி MSM. நசீர் அவர்களினால் மரண விசாரணை நடத்தப்பட்டு கிணற்று நீரில் வீழ்ந்து ஏற்பட்ட விபத்து மரணம் என உறுதி செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது . 


  ‌                                                  (சாதிக் அகமட்)

No comments:

Post a Comment

Post Top Ad