பயணிகள் அமர முடியாத இருக்கைகள் பயணிகள் விசனம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 2 December 2024

பயணிகள் அமர முடியாத இருக்கைகள் பயணிகள் விசனம் !

1f7f5fa5-5d4e-4b5b-9312-224626f1fc8b


மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் ஆசனங்கள் அழுக்கடைந்தும் பறவைகளின் எச்சங்களால் அசுத்தப்படுத்தப்பட்டும் காணப்படுவதனால் பயணிகள் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.


இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரத்திலே இவ்வாறு அருவருப்பான சுத்தமில்லாத இருக்கைகள் காணப்படுகின்றது.

4813c871-1175-4728-8226-d58c669099dd


ஏனைய இருக்கைகள் துருப்பிடித்துக் காணப்படுவதுடன், இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் இவ்வாறே பறவைகளின் எச்சங்களாலும் சில இருக்கைகள் பயணிகள் அமர முடியாதளவில் சேதமடைந்தும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆசாதாரண காலநிலையால் வீதிப்போக்குவரத்தினை தவிர்த்து மக்கள் புகையிரத பயணங்களை மேற்கொள்கின்றனர்.

7850c472-3513-4da6-9b58-73e01261fe72


இவ்வாறான நிலையில் அசுத்தமான நிலையில் காணப்படும் இருக்கைகளால் தூரப்பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர்


ஆகவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டியது அவசியமாகும்.

                                                        ( எஸ்.எம்.எம்.முர்ஷித் )


No comments:

Post a Comment

Post Top Ad