சம்மாந்துறை SLMC-STR இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த இவ்விழா 25.12.2022 ஞாயிற்றுக் கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பைசல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.தௌபீக், கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் க.பொ.த. சா/த பரீட்சையில் சித்தியடைந்து 9A, 8A, 7A பெறுபேறுகளைப் பெற்ற சுமார் 70க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு அதிதிகளிடமிருந்து நினைவுச்சின்னங்களையும் பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை சமூகம், SLMC Str அமைப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஷ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.
No comments:
Post a Comment