மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் தொடர்பான அடிப்படை கற்கையும், பயிற்சியும் அம்பாறையில் ! - தமிழக குரல் - இலங்கை

Post Top Ad

Monday, 19 May 2025

மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் தொடர்பான அடிப்படை கற்கையும், பயிற்சியும் அம்பாறையில் !

1000114859

அல்-உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல்-உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஐ.எல்.எம். முஸ்தபா மௌலவி தலைமையில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக (17,18) அம்பாறை குளத்தில் நடைபெற்றது.


மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் தொடர்பான பயிற்சி நெறியின் முதலாவது நாளாக கடந்த சனிக்கிழமை (17) கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.எம். நஸீர் ஆரம்பித்து வைத்தார்.

1000114857

இதன் போது, அம்பாறை பொலிஸ் நிலைய மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படையின் அதிகாரிகளான எம்.ஏ.பி.புஷ்பகுமார, கே.ஜி.சதாத், ஜே.ஆர்.யு.கீர்த்திசீன, ஏ.டி.அசங்க, டி.எச். மதுசங்க, பி.ஜி.டபிள்யூ.குமார, எச்.ஜி.ஏ.என்.எஸ்.சமீர உள்ளிட்டவர்களினால் தோணி மற்றும் படகு ஓட்டுதல், தாழ்வான இடத்தில் காணாமல் போனவற்றை எப்படி மீட்பது, படகை நிறுத்தி வைப்பதற்கு எவ்வாறு நங்குரம் பயன்படுத்துதல், படகின் இயந்திரத்தை எவ்வாறு திருத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.

1000114860

மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் தொடர்பான பயிற்சி நெறியின் இரண்டாம் நாளாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்கவினால் லைஃப் சேவிங் சேவை பற்றிய விரிவான விளக்கம் வழங்கப்பட்டதுடன், அம்பாறை பொலிஸ் நிலைய மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படையின் அதிகாரிகளான எம்.ஏ.பி.புஷ்பகுமார, கே.ஜி.சதாத், ஜே.ஆர்.யு.கீர்த்திசீன, ஏ.டி.அசங்க, டி.எச். மதுசங்க, பி.ஜி.டபிள்யூ.குமார, எச்.ஜி.ஏ.என்.எஸ்.சமீர உள்ளிட்டவர்களினால் உடற் பயிற்சி மற்றும் தோணி மற்றும் படகு ஓட்டுதல், தாழ்வான இடத்தில் காணாமல் போனவற்றை எப்படி மீட்பது போன்ற பல்வேறு லைஃப் சேவிங் சேவை பற்றிய பல பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1000114856

1000114858

 ‌‌

                                         ‌  ( தில்சாத் பர்வீஸ் )


No comments:

Post a Comment

Post Top Ad