அல்-உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஐ.எல்.எம். முஸ்தபா மௌலவி தலைமையில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக (24) சனிக்கிழமை மற்றும் (25) ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் அம்பாறை நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.
நீச்சல் என்பது எவ்வளவு கடினமானது என பயிற்சி மூலம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன், ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒருவருக்கு எந்த அளவிற்கு அர்ப்பணிப்பும், தைரியமும் தேவைப்படுகிறது என்பதையும் அம்பாறை பொலிஸ் உயிர் காப்பு பிரிவினர் உணர்த்தி இருந்தனர்.
இதன் போது, அம்பாறை பொலிஸ் நிலைய மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படையின் அதிகாரிகளான எம்.ஏ.பி.புஷ்பகுமார, கே.ஜி.சதாத், ஜே.ஆர்.யு.கீர்த்திசீன, ஏ.டி.அசங்க, டி.எச். மதுசங்க, பி.ஜி.டபிள்யூ.குமார, எச்.ஜி.ஏ.என்.எஸ்.சமீர உள்ளிட்டவர்களினால் பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment