ஓட்டமாவடியில் “நினைவில் துளிர்க்கும் வாழ்வியல் நிகழ்வு” ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 12 February 2025

ஓட்டமாவடியில் “நினைவில் துளிர்க்கும் வாழ்வியல் நிகழ்வு” !

1000088531

சேவையின் செம்மல் மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் கபூர் மெளலவியின் “நினைவில் துளிர்க்கும் வாழ்வியல் நிகழ்வு” ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) கேட்போர் கூடத்தில் அண்மையில் (01) இடம்பெற்றது.


ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உள்ள உதவிக்கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.அஷ

1000088538

தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கல்குடா வை.எம்.எம்.ஏ. இஸ்தாபகத்தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.நவாஸ், கிழக்கு பல்கலைக்கழக துறைத்தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி, ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக், ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.ஏ.காதர், கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் எம்.ஏ.தாஹிர் ஹாமி, முன்னாள் தலைவர் மௌலவி எம்.இல்யாஸ், முன்னாள் இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண செயலாற்றுப்பணிப்பாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் எச்.எல்.கலீல், சிரேஷ்ட வைத்தியர் எம்.எம்.முஹைதீன், ஓய்வுபெற்ற அதிபர் யூ.அஹமட், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், மெளலவியின் குடும்ப உறவுகள், நண்பர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர். 

1000088534

கபூர் மெளலவியின் பன்முக ஆளுமைத்தன்மை, சமூகத்துக்கும் அவருக்குமான உறவு, ஆன்மீக, அரசியல், சமூக சேவையில் அவரது வகிபாகம், அனாதைகளுக்கும் அவருக்குமான நெருக்கம், கல்விக்கான அவரது பங்களிப்பு, சமகாலத்தில் பல்வேறு தளங்களில் அவரது செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தலைப்புக்களில் நினைவுரைகள் இடம்பெற்றன. 

1000088529

கல்குடா வை.எம்.எம்.ஏ உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு, செயலாளராக சூறாவளி 20 வீட்டுத்திட்டத்தில் அவரின் மகத்தான பங்களிப்பு தொடர்பில் கல்குடா வை.எம்.எம்.ஏயின் இஸ்தாபகத்தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.நவாஸ் உரை நிகழ்த்தியதுடன், மார்க்க ரீதியாக அவரது பங்களிப்பு தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழக துறைத்தலைவர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி உரை நிகழ்த்துனார்.

1000088524

அத்துடன், அவர் ஆற்றிய பங்களிப்புக்கள் தொடர்பில் சிறப்புரைகள், கவிதை, பாடல் எனப்பல நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஆவணப்படமும் அரங்கேற்றம் பெற்றது. 

1000088521

நிகழ்வுக்கான ஊடக அனுசரணையினை டிஜிடல் வே ஸ்ரூடியோ வழங்கியிருந்தது.

1000088536

1000088538

1000088530

1000088532

1000088522

1000088526

1000088525

1000088527

1000088528

1000088534


                                    ( எஸ்.எம்.எம்.முர்ஷித் )

No comments:

Post a Comment

Post Top Ad