அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (17) இலத்திரனியல் பத்திரிகை வெளியீடு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 November 2025

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (17) இலத்திரனியல் பத்திரிகை வெளியீடு !



அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஒவ்வொரு மாதமும் (e-Paper) இலத்திரனியல் பத்திரிகை என்ற அமைப்பில் வெளியிடுவதற்கு  தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக, "செயலகச் செய்திகள்"  எனும் பெயரை அதிகாரப்பூர்வமாக தாங்கி வரும் முதலாவது மின்னிதழ் வெளியீட்டு நிகழ்வு இன்று (17)  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முசாபிர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிற்பகல் 02.00 மணியளவில் பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றசாக் அவர்களினால் பத்திரிகையின் விமர்சன ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.






செயலகச் செய்திகள் மின்னிதழ் சஞ்சிகைக் குழு உறுப்பினர்கள் விபரம்.


                                       ( சபானா அபூபக்கர்)


No comments:

Post a Comment

Post Top Ad