ஒலுவில் அக்/அல்-ஹம்றா மகாவித்தியாலயத்தில் நேற்று (10) நடைபெற்ற பொது காலைக்கூட்டத்தில் "17 வது படைப்பிரிவின் பெட்டாலியன் செலக்ஸன் கேம்ப்" இல் பங்குபற்றிய கடேட் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிளட்டூன் கொமாண்டர் லெப்டினன்ட் ஏ.எம்.எம்.கியாஸின் வழிநடாத்தலில் அதிபர் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வருகை தந்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
நிகழ்வில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அவர்களை அதிபர் யு.கே.அப்துர் ரஹீம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
இங்கு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் பொலிஸ் (இன்ஸ்டக்டர்) எம்.சுதர்சன், பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
( எஸ்.அஷ்ரப்கான் )
No comments:
Post a Comment