மத்ரஸத்துல் அன்வாறுல் ஹுதாவின் முதல் ஹாபிழை கௌரவிப்பும் விசேட பயான் நிகழ்வும் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 15 November 2025

மத்ரஸத்துல் அன்வாறுல் ஹுதாவின் முதல் ஹாபிழை கௌரவிப்பும் விசேட பயான் நிகழ்வும் !

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலில் இயங்கி வரும் மத்ரஸத்துல் அன்வாறுல் ஹுதா மத்ரஸாவில் 370 நாள்களில் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த இக் கலாபீடத்தின் முதல் ஹாபிழாக அல் ஹாபிழ் எம்.எம்.இஜாஸ் அஹமட் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், அதனை ஒட்டி விசேட இஸ்லாமிய பயான் நிகழ்வு இன்று (15) சனிக்கிழமை 

மத்ரஸத்துல் அன்வாறுல் ஹுதா அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பத்ர் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் ஏற்பாட்டில் சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன் போது, இறுதி 15 ஆயத்துக்களை மனனம் சொல்லி 30 ஜுஷ்களையும் நிறைவு செய்து தலைப்பாகை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினை சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசல் இமாமும், மத்ரஸத்துல் அன்வாறுல் ஹுதா கலாபீடத்தின் அதிபர் அல்ஹாபிழ் ஏ.எல்.எம்.ஹஸ்மாதுல் ஹசன் (தப்லீகி) நெறிப்படுத்தலின், சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் பொறியியலாளர் எம்.ஐ.நசீர் தலைமையில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி அதிபர் ஏ.எல்.எம்.அஷ்ரப் (ஷர்கி) அவர்களினால் அல்குர்ஆனின் முக்கியத்துவம், ஹாபிழ்களின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்தப்பட்டதுடன், நிகழ்ச்சி தொகுப்பு ஏ.பி.எம்.இம்ரான் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், மாவடிப்பள்ளி (மர்கஸ்) ஸஃத் அறபுக் கல்லூரியின் பிரதி அதிபர் அல்ஹாபிழ் எம்.எச்.எம்.ஆஷிக், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.கே.ஏ.றம்ஸீன் காரியப்பர் (தப்லீகி), சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமீர் எம்.ஐ. அமீர்(நழீமி), சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.எல்.எச். பஷீர் (மதனி), மத்ரஸத்துல் அன்வாறுல் ஹுதா கலாபீடத்தின் ஆசிரியர்களான அல்ஹாபிழ் ஜே.எம்.முர்ஷித், யு.எல்.எம்.அறபாத் (தப்லீகி), சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யு.எல்.அப்துல் மஜீட், சம்மாந்துறை ஸதகா நிதியத்தின் தலைவர் ஏ.பி.றம்ஸீன் (காஷிபி), RS House Of Fashion உரிமையாளர் எம்.ஏ.ஏ.ரஹீம், சம்மாந்துறை பத்ர் ஹிஜ்ரா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


                                             (தில்சாத் பர்வீஸ் )

No comments:

Post a Comment

Post Top Ad