அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கடலில் நேற்றைய தினம் (15) தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளையில் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட ஆசிப் அப்துல் ஹமீட் (18 வயது) இளைஞனின் ஜனாசா இன்று கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் அட்டாளைச்சேனைப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவர், நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் (15) அக்கரைப்பற்று கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட பாரிய அலையின் இழுவை காரணமாக அவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். அவருடன் நீராடியவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
சம்பவம் அறிந்தவுடன், இப்பணியில் அம்பாரை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.எம். றியாஸ் தலைமையில் அக்கரைப்பற்றுப் பொலிஸார், கடற்படையினர் மற்றும் அல் உஸ்வா உயிர் காப்பு குழு இலங்கை கடற்படையின் (SL Navy) பாணம, அக்கரைப்பற்று மாநகர சபை பிரதி முதல்வர் யூ எல் உவைஸ். குழு காணாமல் போன இளைஞனைத் தேடும் பணியை உடனடியாக ஆரம்பித்தனர்.
இரவு முழுவதும் தேடுதல் பணிகள் தொடர்ந்த நிலையில், இன்று (16) இரவு 9.மணியளவில் கடற்பரப்பில் இளைஞனின் ஜனாசா கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
நீண்ட போராட்டத்தின் பின்னர் காணாமல் போன இளைஞன் (ஜனாசா) மீட்கப்பட்டமை அட்டாளைச்சேனைப் பகுதியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன.

No comments:
Post a Comment