இந்த நிலையில் நேற்று முன்தினம் தியாவட்டவான், பாலை நகர் பிரதேசத்தில் ஊடுருவிய யானைகள் பாடசாலை மதில் தோட்டம் மற்றும் பிரதேசவாசிகளின் மதில்களையும் உடைத்து சேதப்படுத்தி இருந்தது.
இவ்வாறு உள் நுழைந்த யானைகளை கல்குடா டைவர்ஸ் அணியின் முன்னணி செயற்பாட்டாளரான முஹம்மது ஹலீம் அணியினர் விரட்டியடித்ததுடன், அன்றிரவு முழுவதும் யானை விரட்டும் பணியில் கல்குடா டைவர்ஸின் முன்னணி களச்செயற்பாட்டாளர்கள் தமது உயிர்களைப் பணயம் வைத்து நள்ளிரவு தாண்டியும் ஈடுப்பட்டிருந்தனர்.
அவர்களின் இம்மகத்தான பணியை மனதாரப்பாராட்டுவதோடு, மென்மேலும் அவர்களுக்காக பிரார்த்திப்போம். அத்தோடு, இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருபவர்களில் ஒருவராக முஹம்மது ஹலீம் அவர்களைச் நேரில் சந்தித்த வன இலாகா அதிகாரிகள் ஒரு தொகுதி யானை வெடில்களை வழங்கியதுடன், அதற்கான ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர்.
இது தொடர்பில் முஹம்மது ஹலீம் தெரிவிக்கையில், காட்டு யானைகளிம் ஊடுருவலால் மிகவும் இப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிர், உடமைகளையும் இழந்து வருகின்றனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே நேரம் எமது கல்குடா டைவர்ஸ் அணியினர் இரவு, பகலாக யானை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உதவியாக இன்று என்னை சந்தித்த வன இலாகா அதிகாரிகள் யானை விரட்டும் வெடில்களை வழங்கியுள்ளனர்.
இருப்பினும், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதே இப்பிரதேச மக்களின் கோரிக்கையாகும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment