கல்குடா வை.எம்.எம்.ஏ. அமைப்பினால் மஜ்மா நகரில் கொரோனா மர நடுகைத்திட்டம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 22 January 2025

கல்குடா வை.எம்.எம்.ஏ. அமைப்பினால் மஜ்மா நகரில் கொரோனா மர நடுகைத்திட்டம் !

1000079692

வை.எம்.எம்.ஏயின் 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகர் கொரோனா மையவாடியைச் சுற்றி ஆயிரம் மரக்கண்டுகளை நடும் வேலைத்திட்டத்தை கல்குடா வை.எம்.எம்.ஏ. கிளையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1000079689

பேரவையின் தேசியத்தலைவர் அல் ஹாஜ் அம்ஹர் ஷரீபின் ஆலோசனைக்கமைவாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீனின்  வழிகாட்டலில் முன்னாள் தலைவர் அல் ஹாஜ் எம்.ரீ.தாஸீம் பவுனீயா, மாவட்டப்பணிப்பாளர் எம்.ஆர்.ஜெமீல், முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.இர்பான், செயலாளர் ஏ.எல்.லியாப்தீன் ஜேபி, பொருளாளர் எம்.எச்.எம்.ஆசிக் ஆசிரியர் மற்றும் ஓட்டமாவடி, வாழைச்சேனை, பாலை நகர் கிளைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

1000079701

கல்குடா மத்திய கிளையின் தலைவர் எம்.ஐ.ஜஹாப்தீன் ஜே.பி தலைமையில் முன்னெடுக்கப்படும் குறித்த திட்டத்திற்கு சிட்டி கார்டன் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

1000079674
1000079683
1000079680


                                    ( எஸ்.எம்.எம்.முர்ஷித் ) 

No comments:

Post a Comment

Post Top Ad