ஆனால், இலங்கையின் பிரதான கடனாளியான சீனா, கடன் மறுசீரமைப்புக்கு இன்னும் உடன்படவில்லை. எனவே சர்வதேச நாணய நிதியத்தினால் இவ்வருடம் டிசம்பர் மாதம் வழங்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிவாரணம் அப்போது கிடைக்காது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறாயின், எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் கடன் நிவாரணம் கிடைக்கப்பெறும் எனவும், இவ்வாறான நிலையில் இலங்கைக்கு யார் இடைப்பட்ட காலத்தில் கடன் வழங்கத் தயாராக இருக்கின்றார்கள் என்பதே பிரதான கேள்வியாக எழுந்துள்ளதாகவும் ஹிந்துஸ்தான் நாளிதழ் வினவுகிறது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அண்டை நாடான இந்தியா இதுவரை இலங்கைக்கு நான்கு பில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறவிருக்கும் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல மோசமான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அந்த செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment