மிக நீண்டகாலமாக புதுக்குடியிருப்பு மற்றும் குட்டியாகுளம் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்துவதற்கு மைதானம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர்.
அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அண்மையில் குட்டியாகுளப் பிரதேசத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் வருகின்ற காணியை பயன் படுத்துவதற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் உதவி ஆணையாளர் திரு. விஸ்னுவரதன் அவர்களுடன் கலந்துரையாடியதற்கமைவாக நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாக குறிப்பிட்டார்.
அவர் குறிப்பிட்டமைக்கமைவாக பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியுடன் இன்று (03) 50 வருடங்களுக்கு மேல் விளையாடுவதற்கு நிரந்தர இடம் இல்லாமல் இருந்தகுறை இன்றுடன் நிவர்த்தி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment