பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 June 2024

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் !



கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபைக்கான பொருட்கள் விநியோகமானது நேற்று (13) கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் திருகோணமலை  மற்றும் கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா அவர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.



இதன்போது தேசிய காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லா அவர்களின் பிரத்தியேக செயலாளருமான டாக்டர் சியா,  கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், கிண்ணியா பிரதேச செயலக கணக்காளர் எம். ரினோஸ், கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், நகர சபை, பிரதேச சபை செயலாளர் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



இதன் போது காணிக்கான ஆவணங்களுக்கு விண்ணப்பித்து காணிக்கச்சேரிகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காணி அனுமதி பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


                                                               ( றெனூஸ் ) 

No comments:

Post a Comment

Post Top Ad