கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் தலைமையில், சமகால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
கட்சியினுடைய செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் , பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, அப்துல் வாஸித், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முதுநபீன் முஷாரப், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர் ,மாவட்ட செயலாளர் ஏ.சீ.சமால்தீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேச கட்சி முக்கியஸ்தர்கள், முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் அமைப்பினர், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
( றிஸான் றாசீக், நாசர் சப்னாஸ்)







No comments:
Post a Comment