பேலியகொடையில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் : பெண் உட்பட மூவர் கைது! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 25 May 2023

பேலியகொடையில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் : பெண் உட்பட மூவர் கைது!

பேலியகொடையில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் : பெண் உட்பட மூவர் கைது!


பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவரை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்துக்கு அருகில் போக்குவரத்துக்  கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தலைக்கவசம்  அணியாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை நிறுத்தி சோதனையிடச் சென்றபோது,  மற்றுமொரு பெண் அந்த இடத்துக்கு  வந்து பொலிஸ் உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சந்தேக நபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் 20,22 மற்றும் 51 வயதுடைய களனி, பட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad