யாழில் தீயில் எரிந்த நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 October 2022

யாழில் தீயில் எரிந்த நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு!

யாழ். வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர், வல்வெட்டித்துறை - நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது 30) மற்றும் அவரது மனைவி கிருசாந்தினி (வயது 26) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர், தம்பதி உறங்கிய அறையில் தீப்பரவல் ஏற்பட்டதை அவதானித்த வீட்டார் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாக காணப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad