கெப் வண்டி மீது ரயில் மோதி, இருவர் படுகாயம். - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 18 November 2022

கெப் வண்டி மீது ரயில் மோதி, இருவர் படுகாயம்.

photo_2022-11-18_23-23-19
ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று காலை மட்டக்களப்பில் இருந்து வந்த அதிவேக புகையிரதம், கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புகையிரதம் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். கெப் வண்டியில் இருந்த இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த விபத்தின் காரணமாக ரயிலின் என்ஜின் சேதமடைந்துள்ளது. மட்டக்களப்பில் இருந்து துணை புகையிரதத்தை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

tamilaga%20kural

No comments:

Post a Comment

Post Top Ad