சமுர்த்தி றன்விமன வீடு கையளித்தல் நிகழ்வு ! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 February 2025

சமுர்த்தி றன்விமன வீடு கையளித்தல் நிகழ்வு !



ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் காவத்தமுனை கிராமத்தில் சமுர்த்தி சௌபாக்கியா றன்விமன வீட்டிற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளியான எம்.எம்.சல்மியாவுக்கு வீடு கடந்த  செவ்வாய்க்கிழமை பயனாளியின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன்; கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு, சமுர்த்தி மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஆர். சியாஉல் ஹக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், சமுர்த்தி முகாமையாளர்களான எம்.ஐ.ஏ.அஸீஸ், ஆர்.மதியழகன், என்.விஜிதன், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம், கல்குடா ஸகாத் நிதியத்தின் பிரதிநிதி எம்.ரீ.எம்.அஸ்ரப், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.சுபைர் சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர்களான எம்.என்.எம்.சாஜஹான், பி.கவிதா, சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.







                                                        (எஸ்.எம்.எம்.முர்ஷித் )

No comments:

Post a Comment

Post Top Ad