மீட்டியகொட, மஹவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகரை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் 28 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெட்டியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment