களுத்துறை, பலதொட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்றை இன்று (18) மீட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஓய்வு பெற்ற பொலிஸ் ஆய்வாளர் ஜெ. ரோஹன டி சொய்சா என்ற 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் தெரிவித்தனர்.
களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment