இலங்கை வந்தார் தென்னாபிரிக்க ஜனாதிபதி!. - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 17 November 2022

இலங்கை வந்தார் தென்னாபிரிக்க ஜனாதிபதி!.

photo_2022-11-17_22-51-29

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்துள்ளார். G-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் சந்தித்து இருதரப்பு பிரச்சினைகள் குறித்து அவர் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

tamilaga%20kural

இதேவேளை, இந்தச் சந்திப்பின்போது, கட்டுநாயக்க விமானப்படை தளத்தில், தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இந்த கொண்டாட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad