ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு.! - தமிழக குரல் - இலங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 25 January 2026

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு.!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவு தினம் நேற்று  (24) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டு ஊடக அமையத்தின் தலைவர்  வா. கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.



                                                                             (ரஞ்சன்)

No comments:

Post a Comment

Post Top Ad