அமரர் சி.மு. இராசமாணிக்கம் (முன்னாள் தலைவர் – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் 113வது ஜனன தின நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) காலை 10.00 மணிக்கு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் மிகவும் பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொதுச் செயலாளர் எம்.எ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநகர மற்றும் பிரதேசசாபையின் முதல்வர் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பெருந்திரளான மக்கள் இளைஞர்கள் மற்றும் பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை மிகுந்த உற்சாகத்துடனும் மரியாதையுடனும் சிறப்பித்தனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் சி.மு. இராசமாணிக்கம் அவர்களின் 113-வது ஜனன தின நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்
இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபம், களுவாஞ்சிகுடியில் இன்று (25) காலை 10:00 மணிக்கு ஆரம்பமானது.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றன.
இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விஷேட பூசைகள் இடம்பெற்றன.
அவரது அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்த நினைவுப் பேருரைகளும் இடம்பெறுகின்றன.
இன்றைய நிகழ்வின் போது நடனம் ஆடிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமரர் சி.மு. இராசமாணிக்கம் - ஒரு பார்வை.....
பிறப்பு (20,.01.1913)ஆம் ஆண்டு மண்டூர், மட்டக்களப்பு பிறந்தவர் ஆவர்.
அரசியல் பணியானது பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் சேவையாற்றியவர்.
தந்தை செல்வாவின் அகிம்சைப் போராட்டங்களில் தளபதியாகத் திகழ்ந்தவர்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கொள்கையை வேரூன்றச் செய்தவர்களில் இவர் முதன்மையானவர். தமிழ் - முஸ்லிம் உறவு மற்றும் பிரதேச அபிவிருத்திகளில் முக்கிய பங்காற்றியவர்.
அவரது மறைவு (07.09.1974)ஆம் திகதி இறைபதம் அடைந்தார்.
சி.மு. இராசமாணிக்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு அல்லது அவர் ஆற்றிய அரசியல் பணிகள் ஆனவை
ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மட்டக்களப்பின் ஒரு பலமான தூணாகத் திகழ்ந்த அமரர் சி.மு. இராசமாணிக்கம் அவர்களின் வாழ்வும் பணிகளாவன.
ஆரம்பக் கல்வியை பட்டிருப்பு மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்றார்.
தொழில்:-அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர் ஒரு புகழ்பெற்ற காணி அளவையாளராக (Licensed Surveyor) கடமையாற்றியவர்.
அரசியல் பயணம் (பட்டிருப்புத் தொகுதியின் காவலன்)
சி.மு. இராசமாணிக்கம் அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். தந்தை செல்வா மீது மிகுந்த பற்றுக்கொண்டவர்.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
1970 களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தினார்.
1956 மற்றும் 1961 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வரலாற்றுப் புகழ்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தை முன்னின்று வழிநடத்தினார்.
இதற்காக அவர் பலமுறை சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.
சமூகப் பணிகள் மற்றும் ஆளுமை
அவர் ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், சிறந்த சமூகத் தொண்டராகவும் திகழ்ந்தார்.
கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த விவசாயத் திட்டங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்.
கல்விச் சேவை:- மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்கப் பல பாடசாலைகளைத் தரமுயர்த்தப் பாடுபட்டார்.
இன நல்லுறவு:-
தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்திய ஒரு முற்போக்கான தலைவராக அவர் போற்றப்படுகிறார்.
இன்று அவரது பேரன் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, தனது தாத்தாவின் அரசியல் பாதையைத் தொடர்கிறார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலை மற்றும் ஞாபகார்த்த மண்டபம் இன்றும் அவரது தியாகத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட அவர், தனது வாழ்நாள் முழுவதும் தமிழர்களின் உரிமைக்காகவும், கிழக்கு மண்ணின் தனித்துவத்திற்காகவும் குரல் கொடுத்தவர்.
(ரஞ்சன்)

No comments:
Post a Comment