அனுபவமிக்க மூத்த அரசாங்க அதிகாரியான வி. ஜெகதீசன் அவர்கள் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக அவர்கள் இன்று (14.10.2025) முதல் அமுலாகும் வகையில் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளார்.
வி. ஜெகதீசன் அவர்கள், இதற்கு முன்பு அதே அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்த நிலையில், இன்று (14) தமது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அரசு நிர்வாகத்தில் சிறப்பான சேவையைப் புரிந்துள்ள வி. ஜெகதீசன் அவர்கள், முன்னதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அவரின் நியமனம், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் துறையின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புதிய ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் துறையின் முன்னேற்றம் மற்றும் சேவைத் திறன் மேம்பாட்டுக்காக அவர் தனது அனுபவத்தையும் திறமையையும் அர்ப்பணிப்பார் என நாம் நம்புகிறோம்.
( ஏ.எம்.எம்.றியாத் )



No comments:
Post a Comment