கந்தளாய் – அல் தாரிக் பாடசாலை மாணவர் நூர்தீன் அசாம், பாடசாலைக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் தேசீய ரீதியில் வெற்றி பெற்று, வரலாற்றுச் சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவ்வெற்றியை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக செயலாளரும் பேராறு அமைப்பாளருமான N.M.K. கபார்கான் அவர்கள் நூர்தீன் அசாம் அவர்களை சிறப்பு விழாவொன்றில் கௌரவித்து பாராட்டினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கபார்கான் அவர்கள்,
“நூர்தீன் அசாமின் இந்தச் சாதனை பாடசாலைக்கே மாத்திரமல்லாது, கந்தளாய் வலயத்திற்கும் எமது மண்ணிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. எதிர்காலத்தில் எமது பிரதேச பாடசாலை மாணவர்கள் இதுபோன்ற தேசிய ரீதியிலான வெற்றிகளைப் பெற வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
மேலும், இம்முறை கந்தளாய் வலயத்தின் தமிழ் மொழிப் பாடசாலைகளின் ஊடாக தேசிய போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில், வெற்றி பெற்ற மாணவருக்கும் அவரின் பயிற்சியாளர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
( சல்மான் பாரிஸ் )



No comments:
Post a Comment