மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கோவில்போரதீவு வட்டாரத்தில் மிக நீண்ட காலமாக ஒளிராதிருந்த வீதி மின் விளக்குகளை போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் வட்டார உறுப்பினர் ம.கோபிநாத் தலைமையில் நேற்று (13) மீண்டும் ஒளிரச் செய்துள்ளார்.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதலாவது சபை அமர்வில் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் படி ஒவ்வொரு வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர்களின் வட்டாரத்தில் தலா 100,000/= பெறுமதியான மின் குமிழ் இணைப்பு தொகுதி வழங்குதல் என்ற தீர்மானத்திற்கு அமைவாக நேற்று (13.10.2025) கோவில் போரதீவு வட்டாரத்தின் ஒரு பகுதிக்குரிய உரிய பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மின் குமிழ் மாற்றப்பட்டு புதிய மின்குமிழ்கள் ஒளிர விடப்பட்டது.
அந்த வகையில் மிகவும் நேர்த்தியாக முறையில் போரதீவு பற்று பிரதேச சபை ஊழியர்களால் மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்படி கைங்கர்யம் மிக்க சேவை நேற்றைய தினம் எமது கிராமத்தில் நடைபெற்றது. என கோவில் போரதீவு வட்டார உறுப்பினர் ம.கோபிநாத் தெரிவித்தனர்.
பிரதேச சபை உறுப்பினர் என்ற வகையில் தவிசாளர் பிரதி தவிசாளர் மற்றும் பிரதேச சபை மின்னியல் களப்பணி ஊழியர்கள் , கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
மக்கள் நலம் சார்ந்த சேவைகள் தொடரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என கோவில் போரதீவு வட்டார உறுப்பினர் கோபிநாத் தெரிவித்தனர்.
(ரஞ்சன்)



No comments:
Post a Comment